date_range 09 Apr, 2020

மதுரை புதுார் பி.ஆர்.சி டெப்போவில் TNSTC தொழிலாளி தற்கொலை மிரட்டல்


சம்பளம் பிடித்தம் செய்ததை கண்டித்தும், பணத்தை திரும்ப தரக்கோரி மதுரையை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த பாலா என்ற அரசு பேருந்து ஓட்டுனர் மதுரை புதூர் பகுதியில் உள்ள அரசு பேருந்துகள் நிறுத்தம் பணிமனையில் பணிபுரிகிறார்.

இவர் பணிமனையில் உள்ள டவர் மீது ஏறி நின்று தற்போது தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை வழங்கக்கோரிதற்போது டவர் மீது ஏறி நின்று தற்கொலை செய்ய போவதாக கூச்சலிட்டு வருகிறார்.

அரசு பணிமனை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு வண்டி மற்றும் ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது .

#sriloganathan

Write your comment

add